டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘என்ஜிகே’.. சூர்யா நடிக்கும் இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார் .
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து தண்டல்காரன் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கபிலன் எழுத, கேஜி ரஞ்சித் பாடியுள்ளார். இந்த படம் வருகிற மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.