கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. கேட் வாசலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களது வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்தியஅரசு நிறுவனமான என்எல்சி செயல்பட்டு வருங்கிறது. இந்த பகுதியில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலச்சரி சுரங்கம் தோண்டு வகையில், சுரங்க விரிவாக்கத்திற்காக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சியில் பணி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நெய்வேலி இரண்டாவது சுரங்கம் தோண்டும் பணியில், ஒப்பந்த தொழிலாளர்களாக அந்த பகுதியில் நிலம் கொடுத்த சுமார் 80 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக ஒப்பந்த தொரிலாளர்களிக பணியாற்றி வரும் நிலையில், தங்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது சுரங்கத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வு உயர்த்தி தரக் கோரியது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
இன்று காலை முதல் சுரங்கம் இரண்டின் நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்எல்சி நிர்வாகம் தங்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை, நிரந்தர வேலை வழங்கவில்லை என பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.