நெய்வேலி:

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், அங்கு அமைக்கப்பட்டி ருந்த இரண்டு ஆர்ச்களில் ஒன்று இன்று இடிக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (விகேடி) நெய்வேலி ஆர்ச் கேட் அமைந்துள்ளது. இந்த சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நெய்வேலி டவுன்ஷிப் மக்கள், மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் அன்றாட பணிகளுக்கு தினமும் ஆர்ச் கேட் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த ஆர்ச் இடிக்கப்பட்டது.

நெய்வேலியின் அடையாளச் சின்னமாக விளங்கிய  ஆர்ச் கேட் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆர்ச்சுகளில் ஒன்று இடிக்கப்பட்ட நிலையில் மற்றொன்று ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளது.