புரூசெல்ஸை அடுத்து ஐரோப்பாவை குறிவைத்துள்ளதா ஐஎஸ்ஐஎஸ்?????
brussels-survivor-fanny-klein
புரூசெல்ஸில் நடந்த  தாக்குதல்கள் ஐரோப்பாவில் அடுத்தடுத்து நடக்கப் போகும் பல தாக்குதல்களின் ஆரம்பம் தான் என்றும் மேலும் அது “இடைப்பட்ட(Grey Zone) மண்டலத்தை அணைக்கும்” என்றும்  ISIS  வெளியிடும் டாபிக்(DabiQ) எனும் இணைய இதழில் வெளிவந்துள்ளது.
இடைப்பட்ட/ சாம்பல்(Grey Zone) மண்டலம் என்பது முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நன்மைக்கும் தீமைக்கும் இடைப்பட்ட பகுதி. அதாவது கலிஃபாவுக்கும் இன்ஃபிடெலுக்கும் இடைப்பட்டதாகும். ஒசாமா பின் லேடன் கூறியதை தலையங்கம் மேற்கோளிட்டு காட்டுகையில், “இன்று உலகம் பிரிக்கப்பட்டுள்ளது. புஷ் பேசும் போது,’ஒன்று நீங்கள் எங்களோடு இருங்கள் அல்லது நீங்கள் பயங்கரவாதிகளோடு இருங்கள்’ என்று உண்மையைத் தான் கூறினார் ‘, ஆனால் மேற்கத்திய அறப்போர் நடத்துபவரே பயங்கரவாதிகள் ஆவர். இப்போது, மற்றொரு நிகழ்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது- உலகத்தை பிரித்து எல்லா இடங்களிலும் உள்ள சாம்பல்மண்டலத்தை அழிக்க வேண்டும்”.
ஐஎஸ்ஐஎஸின் யோசனை என்னவென்றால், ஏற்கனவே குழப்பம் உள்ள இடங்களில் வெற்றிடத்தை நிரப்பவும், மற்றும் குழப்பத்தை உருவாக்கி அதைப் பின்னர் நிரப்பவும் வேண்டும்.
ISIS
பின்வரும் அடிகோள்கள்(Axioms) “தி க்ரே சோன்” மற்றும் , 2004 ல் வெளியிடப்பட்ட “தி மேனேஜ்மென்ட் ஆஃப் கேயாஸ்-சாவேஜரி எடுக்கப்பட்டு ஒவ்வொரு  ஐஎஸ்ஐஎஸ் அரசியல், சமய மற்றும் இராணுவத் தலைவர், அல்லது அமீர் அவசியம் படிக்க வேண்டியதாக்கப் பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் இந்த அடிகோள்களை  ஒத்ததாக தான் இருக்கும்.
1.பல இடங்களில் தாக்கவும் மென்மையான இலக்குகளை தாக்கவும் வேண்டும் அதாவது சுற்றுலா பகுதிகள், உண்ணும் இடங்கள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு நிகழ்வுகள் போன்ற பாதுகாக்கப்பட முடியாத எல்லா சாத்தியமான இடங்களிலும்  தாக்க வேண்டும்.

  1. நாஸ்திகர்களின் ஆதாரங்களை பரப்பி அதன் மூலம் எவ்வளவு கரக்க முடியுமோ கரந்து அதனால் மக்களுக்கு அரசாங்கத்தால் தமக்கு பாதுகாப்பு வழங்க முடியாதோ என்று அரசாங்கத்தின் திறன் மீது நம்பிக்கை குறைந்து பலவீனப்படுத்த வேண்டும்.

3.நம்முடைய நிர்வாகத்திலிருக்கும் இடங்களுக்கு பெரும்பாலான மக்களை வரவழைத்து, உண்மையான விசுவாசிக்கும் நாஸ்திகனுக்கும் இடையே உள்ள “கிரே சோனை” நீக்க வேண்டும். பிறகு பயங்கரவாத தாக்குதலை நடத்தி முஸ்லிம்கள் அல்லாத முஸ்லிம்கள் இஸ்லாமியத்தை வெறுக்கிறார்கள் என்றும் அவர்கள்  இஸ்லாமியத்தை பின்பற்றுபவர்களை துன்புறுத்துவர் என்ற எண்ணத்தையும் முஸ்லிம்களுக்கு உணர வையுங்கள் மேலும்  சமாதானத்தை எதிர்பார்த்தால் முஸ்லிம்களுக்கு வலியும் வேதனையும் தான் கிடைக்கும் என்பதை புரியவையுங்கள்.
4.சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அனுதாபிகளை வன்முறைக்கு ஊக்குவிக்கு வேண்டும்.  செய்தி தொடர்பு: உங்களால் முடிந்ததை ,உங்களிடம் உள்ளதைக் கொண்டு,எங்கிருக்கின்றீர்களோ அங்கிருந்தே, எப்போது சாத்தியமாகுமோ அப்போது செய்யுங்கள்.
ஐஎஸ்ஐஎஸ் க்ரே சோனை அழிக்கும் செயல்முறையில் ஐரோப்பவிலுள்ள பல நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் திட்டம் நடத்தப்போகிறது மேலும் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள சிரியா மற்றும் ஈராக்கை அதன் ஆதரவாளர்களின் கவனத்திலிருந்து திசைத்திருப்பப்போகிறது.
ஐரோப்பா மற்றும் பல இடங்களில் நடந்த அல் கொய்தாவின் தாக்குதல்கள் நேரடி கட்டளையினாலோ கட்டுப்பாட்டினாலோ அல்லாமல் பெரும்பாலும் தூண்டிவிடப்பட்டு நடந்தவை. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் அல் கொய்தா போலல்லாமல்  கட்டளையினாலும் ஆர்வத்தோடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஐஎஸ்ஐஎஸை அதனுடைய மையப்பகுதியில் பிடித்து அழிக்க இராணுவ நடவடிக்கை எடுக்கவும் மேலும் முக்கியமாக இதில் அமெரிக்கப் பட்டாளத்தை அறிமுகப்படுத்தாமல் செய்யவேண்டும். இதை நம் அரசியல்வாதிகளும் இராணுவ தலைவர்களும் அறிவிப்பதைப்போல் பொதுவானதாக இருந்தாலும் சாதித்துக்காட்டுவது மிகவும் கடினமாக இருக்கும்.