புபனேஷ்வர்: சமீபத்தில் நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் வழிகாட்டலில், இந்திய ஹாக்கி அணி புதிய வேகத்துடன், எஃப்ஐஎச் சீரீஸ் ஹாக்கி இறுதிப் போட்டிகளில் தனது பயணத்தை துவக்கியுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டித் தொடரின் ‘ஏ’ பிரிவில், போலந்து, ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென்ஆப்ரிக்கா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

உலகளவிலான ரேங்கிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்திய அணி, இந்தப் போட்டித் தொடரில் கோப்பையை வெல்லும் என்ற வலுவான நம்பிக்கை நிலவுகிறது.

ஆனால், டோக்கியோவில் 2020ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதிபெறுவதற்கு இந்திய அணி இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லாததால், இந்திய அணிக்கு இன்னும் தகுதி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]