இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

newzeland

ஆஸ்திரேலியா உடனான சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் இந்திய் அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இதனால் அந்த அணியின் அதிரடி பேர்ஸ்மேன்களான குப்தில் 5 ரன்களிலும், மன்ரோ 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய டெய்லர் 24ரன்களிலும், லாதம் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோதும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தவும் போராடினார். எனினும் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. இந்நிலையில் கேப்டன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பிற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேற நியூசிலாந்து அணி 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை எடுத்தது. இதில் குல்தீப் யாதவ் 4விக்கெட்டுகளையும். ஷமி 3விக்கெட்டுகளையும், சாஹல் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றின்ர்.

இதனை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது.