சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி 2016ம் ஆண்டு மே முதல் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் துணை வேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருப்பார்.
இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக 24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி. இயக்குனராக 6 ஆண்டுகளும் சூரப்பா பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel