கொச்சி: ‘உர்ஜா பிரவாஹா’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கா நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்றது.

இந்திய கடலோர காவல்படையில் 20,000 வீரர்கள் மற்றும் சில நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட  160 கப்பல்கள் மற்றும் 62 விமானங்கள் உள்ளிட்டவை உள்ளன. கடற்படையில் 67,000 வீரர்கள் மற்றும் 75,000 ரிசர்வ் வீரர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுகின்றனர்.  இந்திய கடலோர காவல்படைக்கு மொத்தம் 42 நிலையங்கள் உள்ளன. இந்திய கடற்படையில் 67 நிலையங்கள் உள்ளன. இவை மேற்கு கடற்படை தளம், தெற்கு கடற்படை தளம் மற்றும் அந்தமான நிகோபார் கடற்படை தளம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில், 150 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படையிடம் உள்ளன. இந்த நிலையில், கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  புதிதாக ‘உர்ஜா பிரவாஹா’ என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில்  சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கப்பலானது  36 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் சரக்கு கப்பல் எரிபொருள், விமான எரிபொருள் மற்றும் நன்னீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், கடலில் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டு திறனை நிச்சயமாக மேம்படுத்தும்” என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.