சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு, ரூ.32.09 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுஉள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.32.09 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.32.9 கோடி செலவில் 500 இருசக்கர வாகனங்கள், 300 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களை, கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Patrikai.com official YouTube Channel