ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. இந்த ஆண்டு முழுவதும் வலிமை படம் அப்டேட் கேட்டு சோர்த்து விட்டார்கள் தல அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராமல் வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள்.

இதனிடையே, தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.

‘வலிமை’ படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

வலிமை படத்தில் அஜித் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போலீஸ் கேரக்டருக்காக வெயிட்டை குறைத்துள்ளாராம் அஜித். படத்தில் அவர் பெயர், அர்ஜுன் எனவும் கூறப்படுகிறது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அனுமதி கொடுக்க மறுக்கும் ஆபீசர் வேடத்தில் நடித்த கன்னட நடிகர் அச்யுத் குமார், இதில் அஜித்தின் குடும்பத்தில் ஒருவராக நடிக்கிறார்.

நடிகர் அதர்வா நடித்த ‘நூறு’ படத்தின் வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறார். இது தவிர ‘வடசென்னை பாவெல் நவகீதன், காமெடிக்கு யோகிபாபு, புகழ் என பலரும் நடிக்கிறார்கள். படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடித்துள்ளார்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளாராம் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி உள்ளாராம். அப்பாடல் ‘ஆலுமா டோலுமா’ பாடலைப் போலவே இந்த ஆண்டின் தெறிக்கும் பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.