நாகர்கோவில்,

மிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தவிர்க்கும் பொருட்டு, எல்லை குறித்த கண்டறிய புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவரான தமிழகத்தை சேர்ந்த சிவன்பிள்ளை கூறி உள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை ராணுவத்தினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், அடித்து விரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண ‘நாவிக்’ என்ற கருவி தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.

சிவன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய சிவன்,  தமிழக மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த கருவி  பல கட்ட சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அந்த கருவிக்கு   ‘நாவிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன்   மூலம் மீனவர்கள் சர்வதேச எல்லை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்றார்.

இந்த கருவி  தமிழக மீனவர்கள் மட்டுமின்றி இந்திய மீனவர்கள் அனைவருக்கும் எல்லை பிரச்னைக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த சிவன்பிள்ளை, கடந்த 12ந்தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவராக பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.