சென்னை:

மிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தை தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  பதில் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அதன்படி,  ஆம்னி பேருந்துகளின் இருக்கைக்கு ஒன்றுக்கு மாதம் ரூ.2000 வரியும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு மாதம் ரூ.2500ம்  வரியாக வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும்  சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்துகளை விட நவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு இருந்தாலும், அதை பயணிகள் உபயோகித்து வரும் நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு காரணமாக மேலும் கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.