டில்லி

கில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து மத்திய அரசு புதிய நடைமுறைகளை அமல்படுத்த உள்ளது.

தற்போது மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 15 சதவீத இடங்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு வழங்கப்படும் இடங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின் மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி வழங்கப்படும்.

இதில் தமிழகத்தை பொறுத்த வரையிலும் இளநிலை படிப்பில் 450 இடங்களும், முதுநிலைப்படிப்பில் 9075 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்குப் பின் இளநிலை மருத்துவ படிப்பில் 200 முதல் 300 இடங்கள் தமிழகத்திற்கே மீண்டும் கிடைத்து வந்தது. அவற்றில் தமிழக மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த கல்வியாண்டில் இருந்து புதிய மாணவர் சேர்க்கை நடைமுறைகளை அமல்படுத்த உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஒன்று கூட மாநிலங்களுக்கு திருப்பித் தரப்படமாட்டாது.

தவிர இந்த இடங்களை அகில இந்திய அளவில் பயன்படுத்த வசதியாக வழக்கமாக வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு 4 முறை நடத்தப்பட உள்ளது.  அதாவது கடைசி இடங்கள் நிரப்பும் வரை கலந்தாய்வு நடைபெற உள்ளன.  இது மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.