சென்னை: குருப்-4, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுக்காக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுளளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி ஒவ்வொரு தேர்வரும் தமிழ் மொழி தாளில் கட்டாயம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். புதிதாக தமிழ்தான் சேர்க்கப்பட்டுள்ள தால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா அல்லது பாடத்திட்டம் மாற்றியடைக்கப்படுமாக என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு தீர்வளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படிதான் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, அதற்காக பாடத்திட்டத்தினை தற்போது வெளியிட்டுள்ளது.
குருப்-2 மற்றும் குருப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்திலும், குருப்-4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்துஉள்ளது. இந்நிலையில், இத்தேர்வுகளுக்கு தற்போது புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்….
https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G2_Revised_Scheme_Syllabus_27012022.pdf