டில்லி
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை திறக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
அத்துடன் ஊரடங்கு அறிவிப்பால் உச்சநீதிமன்றம் முழுவதுமாக மூடப்பட்டது.
தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறைகளை காலை 10 மணி முதல் மாலை நான்கு மணி வரை திறக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே அறைகள் திறக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒற்றைப்படை எண்கள் கொண்ட அறைகள் ஒரு நாளும் இரட்டைப்படை எண்கள் அடுத்த நாளும் திறக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.