டில்லி

ந்திர மாநிலத்தில் புதிய ரெயில்வே பிரிவாக தெற்கு கடற்கரைப் பகுதி ரெயில்வே அமைக்கப்பட உள்ளது.

கடந்த வருடம் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர பிரதேச புனரமைப்பு விதி 2014 இன் கீழ் விசாகப்பட்டினத்தில் ஒரு ரெயில்வே மண்டலம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.    அப்போது  அந்த கோரிக்கையை ரெயில்வே அமைச்சகம் நிராகரித்தது.    இவை எல்லாம் தேவை அற்ற ஆணிகள் என விமர்சனமும் எழுப்பியது.

தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரைப் பகுதி ரெயில்வே என்னும் புதிய மண்டலம் தொடங்க உள்ளதாக ரெயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “விசாகப்பட்டினத்தில் தெற்கு கடற்கரை ரெயில்வே மண்டலம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.  தற்போது உள்ள குண்டக்கல், குண்டூர், விஜயவாடா மற்றும் வால்டேர் பிரிவுகள் இரண்டு  பிரிவாக பிரிக்கப்பட்டு அவை இந்த மண்டலத்தின் கிழ் இயங்கும்” என தெரிவித்துள்ளார்.

இதுவரை 12 புதிய மண்டலங்கள் அமைக்கக் கோரி 51 கோரிக்கைகளும், 35 கூடுதல் பிரிவு அமைக்கும் கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.   ஆந்திராவின் இந்த புதிய மண்டல அமைப்பின் மூலம் ரெயில்வே துறை ரூ.41,303 கோடி மதிப்பிலான  புதிய திட்டங்களை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது/