கொழும்பு:
லங்கையில் புதிய அதிபர் இன்று தேர்வு நடைபெற உள்ளது.

ராஜபக்சேக்களின் மோசமான ஆட்சி நிர்வாகத்தினால், இலங்கை இன்று கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் காரணமாக, ராஜபக்சே குடும்பத்தினர் பதவிகளை ராஜினாமா செய்து தலைமறைவான நிலையில், அதிபராக இருந்த கோத்தபயவும், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியில் இருந்த டலஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுன  கட்சியின் அனுர குமார திசநாயக்க உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்க்கட்சியான பொது ஜன பெரமுன கட்சித் தலைவர் சஜித் பிரமேதசா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று மாலைக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.