பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தயாராகி வருகிறது. டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

தற்போது நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கொரோனா இரண்டாம் அலையால், இந்த முறையும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீடு 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று (20.05.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஜூனியர் என்டிஆரின் சிறப்பு போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் வேல்கம்புடன் ஆக்ரோஷமாக ஜீனியர் என்டிஆர் சீறும் வகையில் உள்ள இந்தப் போஸ்டர், இணையத்தில் வைரலாகிவருகிறது.

[youtube-feed feed=1]