சென்னை:

செல்போன் திருட்டை தடுக்க தமிழக காவல்துறை ‘டிஜிகாப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து விளக்கினார்.

செல்போன் திருட்டை தடுக்கவும், தொலைந்து போன செல்போன்-ஐ எளிய முறையில் கண்டுபிடிக்க உதவும் வகையில் “டிஜிகாப்” உபயோகப்படும் என்றும், இதன் காரணமாக செல்போன் திருட்டுகள் பெருமளவு குறையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த டிஜிகாப் செயலி மூலம் செல்போன், பைக் திருட்டை தடுக்க முடியும். பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க உதவும்’ என்றார்.

 

மேலும், ‘சிசிடிவி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விஜய் சேதுபதி, சாலமன் பாப்பையா, கோபிநாத், டாக்டர் சாந்தா, ஐசரி கணேஷ், கமலா செல்வராஜ், ஜோஸ்னா செல்லப்பா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.