மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில், அவர் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வாரா என்பது பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையின்  மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை  288 ஆகும். ஒரு உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய பலம் 287. மெஜாரிட்டிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், சிவசேனா அதிருப்தி- பா.ஜனதா கூட்டணி அரசு மெஜாரிட்டிக்கு கூடுதலாக 20 ஓட்டுகள் பெற்று சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந் தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் பெற்றிபெற்றதால் நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் சிண்டேவுக்கு மொத்தமுள்ள சிவசேனாவின் 55 எம்எல்ஏக்களில் 39 பேர் ஆதரவு உள்ளது. மேலும் 10 சுயேச்சைகள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பாஜகவின் 106 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் சில சிறிய கட்சிகள் ஆதரவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏக்நாத் ஷிண்டே புளோர் டெஸ்டில் எளிதாக வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கட்சியின் நிலை : சிவசேனா 55, என்சிபி 53, காங்கிரஸ் 44, பாஜக 106, பகுஜன் விகாஸ் அகாடி 3, சமாஜ்வாதி கட்சி 2, ஏஐஎம்ஐஎம் 2, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, எம்என்எஸ் 1, சிபிஐ (எம்) 1, பிடபிள்யூபி 1 , ஸ்வாம்பிமணி பக்ஷா 1, ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா 1, ஜான்சுராஜ்ய சக்தி கட்சி 1, கிராந்திகாரி ஷேத்காரி கட்சி 1, மற்றும் சுயேச்சைகள் 13.

கடந்த மாதம் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. இரண்டு என்சிபி உறுப்பினர்கள் – துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சகன் புஜ்பால்  ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதனால் அவர்கள் புளோர் டெஸ்டில் கலந்துகொள்வது சந்தேகமாக உள்ளது. அதுபோல அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக்  ஆகிய 2 எம்எல்எக்கள் சிறையில் உள்ளனர்.

Maharashtra political crisis Shiv Sena Devendra Fadnavis BJP மகாராஷ்டிரா அரசியல் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தேவேந்திர பட்னாவிஸ் பாஜக Eknath Shinde

https://www.maalaimalar.com/news/district/investors-conference-in-chennai-today-mk-stalin-481118?infinitescroll=1