டில்லி

ங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் வீசிய யாஸ் புயல் பாதிப்பு இன்னும் குறையாமல் உள்ளது.  இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் உருவாகி உள்ள ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “வங்கக் கடலின் வடமேற்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.  இந்த பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு மற்றும் வட மேற்கு பகுதியை நோக்கி நகரக் கூடும்.

இதனால் பெரும்பாலான இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள மத்திய இந்தியப் பகுதிகளில் கனழை பெய்யலாம்.  ஒரு சில இடங்களில் அதிகன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.  இதனால் ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா ஆகிய பகுதியில் அதிகன மழை பெய்யலாம்.

ஆகவே வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வேசக் கூடும்.  எனவே மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.   தவிர இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.