மும்பை

காராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது  இங்கு நேற்று வரை சுமார் 57.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 95000 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 53.62 லட்சம் பேர் உயிர் இழந்து சுமார் 2.72 லடம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு தளர்வில்லா முழு ஊரடங்கை அறிவித்தது.   இதையொட்டி மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.   இதையொட்டி ஊரடங்கு விதிகளில் தளர்வு அளிக்கும்படி பல தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இதன் அடிப்படையில் புதிய ஊரடங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, “மகாராஷ்டிராவில், எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது ஒரு நகராட்சியிலும் கொரோனா விகிதம் 10% க்கும் குறைவாகவும், ஆக்ஸிஜன் படுக்கைகள் ஆக்கிரமிப்பு 40% க்கும் குறைவாகவும் இருந்தால், அங்கு அத்தியாவசிய கடைகள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறந்திருக்கும்.

மேலும் உள்ளூர்நிர்வாகம் அப்போதைய நிலைமையின் அடிப்படைகள் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் மால்களை மீண்டும் திறக்க முடிவு எடுக்கும்.

கொரோனா பாதிப்பு விகிதம் 20% க்கும் அதிகமாக இருந்தால், அந்த குறிப்பிட்ட மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்படும்,   அத்துடன் சரியான காரணம் இல்லாமல் மாவட்டத்துக்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.