லண்டன்:
வரும் 30-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்கும் போட்டியில் இந்திய அணியினர் காவி நிற ஜெர்ஸி அணிந்து விளையாடுவார்கள் என்ற அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்துள்ளன.
இந்திய அணியின் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளில் 24 முறை உடை டிசைன் மாற்றப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்டாலும், அனைத்திலும் நீல நிறமே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், வரும் 30-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக மோதும் இந்திய அணியின் ஜெர்ஸியை காவி நிறமாக வடிவமைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
பாஜக அரசு நாட்டையே காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஐசிசி, இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 தொடருக்கான ஜெர்ஸியில் இருந்து புதிய டிசைன் தேர்வு செய்து வடிவமைக்கப்பட்டதாக கூறியுள்ளது.
பல்வேறு தரப்பினரும் உடை மாற்றத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் காவி ஜெர்ஸி உடை குறித்த ஆதரவும் மற்றும் எதிர்ப்பு பதிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.