அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா விமான நிலையத்தில் இருந்து நியூ ஜெர்சி-க்கு திங்களன்று சென்ற விமானத்தில் பாம்பு புகுந்ததால் பயணிகள் பீதி.

‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான பிளைட் எண் ‘#2038’ நியூ ஜெர்சி விமான நிலையத்தில் தரையிறங்கி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிகள் அலறல் சத்தம் கேட்டது.

விமானத்தில் ‘கார்டர்’ எனும் விஷத்தன்மை இல்லாத அமெரிக்க வகை பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து பிஸினஸ் கிளாஸில் இருந்த மற்ற பயணிகள் தங்கள் கால்களை தூக்கி சீட்டில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

விமான ஊழியர்கள் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததை அடுத்து பாம்பு பிடிக்க படை திரண்டது.

அந்த பாம்பை பிடித்த அவர்கள் விமானத்தில் வேறு ஏதும் பாம்புகள் இல்லை என்பதை உறுதியளித்ததைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.

கார்டர் வகை பாம்புகள் புளோரிடா மாகாணம் முழுவதும் அதிகளவு உள்ளது, 18 முதல் 26 அங்குல நீளம் கொண்ட இந்த வகை பாம்புகள் யாரும் அதற்கு தீங்கு செய்யாதவரை நல்ல பாம்பாக இருக்கும் என்றும் இது பொதுவாக மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது என்றும் அதற்கு விஷ தன்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.