சென்னை,

ளையராஜாவுக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கியுள்ளது. இளையராஜா தலித் என்பதால் விருது வழங்கப்பட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையொட்டி, தற்போது இளைஞராஜா குறித்த கட்டுரை வெளியிட்டதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிட்ட் செய்தியில்,  “பத்ம விருதுகள் வழங்குவதில் எப்போதுமே அரசியல் நோக்கம் இருப்பதாகவும், அதையொடிடியே   இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள விருதுகளில் அரசியல் நோக்கம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளதாக கூறியதுடன்,  ”தற்போது குஜராத் பாஜக அரசுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி போர்க்கொடி உயர்த்தி இருப்பதால் தலித் வகுப்பை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயரிய விருது அளிப்பதன் மூலம் அரசு தலித்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்தியஅரசு காட்டிக் கொள்கிறது.   மேலும் சிறுபான்மையினரை திருப்திப் படுத்த குலாம் முஸ்தஃபா கான்,  மற்றும் இந்துத்வாவினரை திருப்திப் படுத்த பரமேஸ்வரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது”  எனவும் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.