லண்டன் : பிரிட்டனில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகளையும் இன்னமும் கொரோனா வைரசானது அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல கட்டமாக முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டனில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் நாடாளுமன்றத்தில் கூறியதாவது:
லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் புதிய மரபணு மாறுபாடு கொண்ட கொரோனா வைரசானது வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிட்டனின் பல்வேறு இடங்களில் வேகமாக பரவி வருகிறது.
தெற்கு பிரிட்டனில் 1,000 க்கும் மேற்பட்டோர் இந்த புதிய மாறுபாடு கொண்ட வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கூறினார்.