டெல்லி: நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 11ம் தேதி வரை உருமாறிய கொரோனா பாதிப்பு 96 ஆக இருந்தது. நேற்று மேலும் சிலருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று உருமாறிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 102ஆக உயர்ந்து உள்ளது.

இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]