பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய கவர்னர்…..புது சர்ச்சை

சென்னை:

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின் முடிவில் பெண் நிருபர் ஒருவர் கவர்னரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அப்போது கவர்னர் அந்த பெண் நிருபரின் கண்ணத்தில் தனது கையால் லேசாக தட்டி அதை பதிலாக தெரிவித்தார். இந்த புகைப்படத்தை அந்த பெண் நிருபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஒரு பெண் நிருபரின் கண்ணாடி அழகாக இருக்கிறது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கவர்னர் ஒரு பெண் நிருபரின் கண்ணத்தை தட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: new contravorsy arise that governor banvarilal prohit pat a female journalist cheek in a press meet, பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய கவர்னர்.....புது சர்ச்சை
-=-