சென்னை:

மிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுள்ள சண்முகம், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து புதிய தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வாழ்த்து பெற்றார்.

சேலம் அருகே உள்ள வாழப்பாடியை சேர்ந்த சண்முகம், கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் நிதித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அப்போதைய முதல்வர்  கருணாநிதியின் நன்மதிப்பை பெற்ற சண்முகம் தொடர்ந்து ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய 4 முதல்வரிகளிடமும் நற்பெயர் பெற்றவர்.

9 ஆண்டு காலமாக நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்த சண்முகம் தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றார். அதையடுத்து, முதல்வர், துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.