டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்து குடியரசு தலைவர் முர்மு அறிவித்து உள்ளார். தற்போதைய தலைமைநீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்  ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கவே உச்சநீதிமன்ற கொலிஜியம்,  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட சில  நீதிபதிகள் பணியிட மாற்றம்  செய்து  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதை ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது. அதை ஏற்று குடியரசு தலைவர் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பா உத்தரவை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,   சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்​களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்​தானுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்​.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிப​தி​யாக மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மூத்த நீதிப​தி​யாக பதவி வகித்த கல்​பாத்தி ராஜேந்​திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்​.ஸ்ரீராம் கடந்த 2024 செப்​.27 அன்று பொறுப்​பேற்​றார். வரும் செப்​.27-ம் தேதி​யுடன் பணிஓய்வு பெறவுள்ள நிலை​யில், அவரை ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​துக்கு இடமாறு​தல் செய்​ய​வும், அங்கு தலைமை நீதிப​தி​யாக பணி​யாற்றி வரும் ஸ்ரீவத்​ச​வாவை சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யாக நியமிக்​க​ப்பட்டுள்ளார்.

இதே​போல சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​யாக பதவி வகித்து வரும் பட்டு தேவானந்​த் ஆந்​திரா உயர் நீதி​மன்​றத்​துக்கும் நீதிபதி விவேக் குமார் சிங் மத்​தி​ய பிரதேச உயர் நீதி​மன்​றத்​துக்கும் இடமாறு​தல் செய்​து குடியரசுத்​ தலை​வர்​ உத்​தர​விட்​டுள்​ளார்​.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக பதவி​யேற்​க​வுள்ள எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, கடந்த 1964 மார்ச் 6-ம் தேதி பிலாஸ்​பூரில் பிறந்​தார். 1987-ம் ஆண்டு வழக்​கறிஞ​ராக பதிவு செய்​தார். 2009-ம் ஆண்டு சட்​டீஸ்​கர் உயர் நீதி​மன்​றத்தில் நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்​தான் உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இடமாறு​தல் செய்​யப்​பட்​டார். பின்​னர் கடந்​தாண்டு பிப்​.6-ம் தேதி ராஜஸ்​தான் உயர் நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் இவர் தற்​போது சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​தி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.