சென்னை

மிழக கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவராக உதயன் ஐ எஃப் எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலம் பதவி வகித்து வந்தார்.  அவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு எழுந்தது.   இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவலர் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவை சிக்கின.

வெங்கடாசலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  தமிழக அரசின் சுற்றுச் சுழல், ,காலநிலை மாற்றம்,  வனத்துறைச் செயலராக உள்ள சுப்ரியா சாகு ஐ ஏ எஸ் க்கு மாசுக் கட்டுப்பாட்டுத் தலைவர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது.  அதையொட்டி அவர் இதை கூடுதல் பொறுப்பாக நியமித்து வந்தார்.  

இந்நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன் ஐ எஃப் எஸ் நியமனம் செய்யப்படுகிறார்.” எனக் கூறப்பட்டுள்ளது.