நெல்லை:
15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்பட உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளுக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட்டில் நெல்லை புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வந்த பணிகள் நிறைவுற்ற நிலையில் நெல்லை வேய்ந்தான் குளம் புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதிய பேருந்து-நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.