சென்னை: 7 நகராட்சிகளில் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 புதிய பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, . நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, கீழ்க்காணும் உள்ளாட்சி அமைப்புகளில் 24 புதிய நவீன பேருந்து நிலையங்கள் ரூ.302.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது:-
“திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், திருவள்ளூர், வடலூர், சிதம்பரம், பேர்ணாம்பேட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், லால்குடி, துறையூர், அரியலூர், பொள்ளாட்சி, ஆற்காடு, மேலூர், உசிலம்பட்டி, கூடலூர், ராமநாதபுரம், திருச்செந்தூர், சாத்தூர், கொளச்சல், மேட்டூர், எடப்பாடி ஆகிய நகராட்சிகள் மற்றும் சாயர்புரம், திருவட்டார் ஆகிய பேரூராட்சிகள்”.
மேற்காணும் அறிவிப்பினைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.173, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கடந்த ஆண்டு டிசம்பர் 08ல் ரூ.115.37கோடி மதிப்பீட்டில் “திருப்பூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள், கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரணயம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி” ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் கட்ட நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை) எண்.28, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிப்ரவரி 22ல் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க அரசால் நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 ஊர்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மேட்டூர், சிதம்பரம், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.