காந்திநகர்:
வடக்கு குஜராத்தில் பனாஸ் கந்தா பகுதியை சேர்ந்தவர் சாத்வி ஸ்ரீ கிரி. பெண். மத போதகர். இவர் அப்பகுதியில் ஒரு கோவிலில் அறங்காவலராக உள்ளார்.

இவர் உள்ளூர் நகை கடை ஒன்றில் 5 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கிவிட்டு அதற்கான பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்தார். இது குறித்து அந்த நகைக்கடை உரிமையாளர், பனாஸ்கந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சாத்வி வீட்டை சோதனை செய்தனர். சோதனையில் 24 தங்கக் கட்டிகள், 1.29 கோடி ரூபாய் மதிப்புடைய புதிய ரூ. 2000 நோட்டுக்கள் மற்றும் சாராய பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பனாஸ்கந்தா போலீசார் சாத்வி ஸ்ரீகிரியைக் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.
[youtube-feed feed=1]