டில்லி:
இந்திய வரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் 200 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மோடி பணமதிப்பிப்பு அறிவிப்பு வெளியிட்டபோது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதியதாக ரூ.2000 நோட்டும், 500 ரூபாய் நோட்டும் அச்சிட்டு வெளியிட்டது.
இந்நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
மத்திய அரசு 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரன்சி துறையின் மூத்த அதிகாரி கூறும்போது, முதல்கட்டமாக புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கி 21 நாட்களில் முடிவடைந்தது என்றும் அதே நேரத்தில், புதியதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.