ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடித்த விளம்பரம் – கடுப்பான மேத்யூ ஹேடன்!

Must read

ஆஸ்திரேலிய உடை அணிந்த குழந்தைகளுடன் சேவாக் நடித்த விளம்பரத்திற்கு ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேடன் பதிலடி கொடுத்துள்ளார்.

indian

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்டை வம்பிழுத்தார். டிம் பெயின் தனது மனைவியுடன் சினிமாவிற்கு செல்லும்போது வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வருகிறயா என ரிஷப் பண்டை பார்த்து கேலி செய்தார்.

இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிம் பெயினின் குடும்பத்தாரை சந்தித்த ரிஷப் பண்ட் அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு புகைப்படம் எடுத்தார். இதனை டிம் பெயின் மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

தற்போது நியூசிலாந்து உடனான தொடர்கள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியா வரவுள்ளது. அந்த அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் முன்னாள் இந்திய வீரர் அதிரடி மன்னர் வீரேந்திர சேவாக் நடித்துள்ளார்.

விளம்பரத்தில் ஆஸ்திரேலிய உடை அணிந்த குழந்தகளை தூக்கி வைத்துக் கொண்டு சேவாக் நடித்துள்ளார். அந்த விளம்பரம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினின் குழந்தையை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், “ஆஸ்திரேலியர்களை காமெடிக்காக பயன்படுத்த வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள் உலக கோப்பையை வென்ற போது யாரின் குழந்தை அதன் அருகில் இருந்தது என்று” என சேவாக் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேத்யூ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article