டில்லி
வங்கியில் பண மோசடி செய்து விட்டு லண்டனுக்கு ஓடிப்போன நிரவ் மோடியின் ஆடை குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவு இட்டு வருகின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டார். அவரை சிபிஐ உள்ளிட்ட அமைப்புக்கள் தேடி வருகின்றன. இந்நிலையில் அவர் லண்டனில் வசித்து வருவதாக தி டெலிகிராஃப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது. அவர் லண்டனில் வசதியாக ஒரு பெரிய குடியிருப்பில் வசிப்பதாகவும் மீண்டும் வைர வியாபாரம் செய்வதாகவும் அந்த தகவலில் காணப்பட்டது..
அவற்றுக்கும் மேலாக பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு விஷயம் அந்த தகவலில் அவருடைய உடையை பற்றியதாகும். அவர் நெருப்புக் கோழியின் தோலினால் செய்யப்பட்ட கோட்டை அணிந்திருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் அவர் மீசை வைத்தபடி அந்த கோட்டை அனிந்து இருக்கும் புகைப்படமும் செய்தியுடன் வெளியிடப்பட்டது
I hadn’t even heard of Ostrich leather until today. pic.twitter.com/PIiWEWY15q
— Shiv Aroor (@ShivAroor) March 9, 2019
சுமார் 10000 பவுண்ட் விலையிலான இந்த கோட் குறித்து நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். பலர் நெருப்புக் கோழி தோலால் உடை செய்யலாம் என்பதை தற்போதுதான் கேள்விப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
But but, what is ostrich leather ? 😱😱 https://t.co/pCNxyZ6Enq
— Garvita Khybri (@GarvitaKhybri) March 9, 2019
ஒரு சிலர் அப்படியும் இந்த உலகத்தில் ஒரு உடை உள்ளதா எனவும் ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர்.
Ostrich leather costs THAT much? But why? It looks like s**t. https://t.co/F6SLPgLW5w
— Rezaul Hasan Laskar (@Rezhasan) March 9, 2019
மிகவும் எரிச்சல் அடைந்த ஒரு நெட்டிசன் இந்த உடை மலம் போல உள்ளதாக பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.