டில்லி

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க தடை விதித்த சீனாவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.   ஆகவே அந்த இயக்கத் தலைவன் மசூத் அசார் ஒரு சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கக் கோரி இந்தியா ஐநா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்தது.

தற்போது சீனா அமைத்து வரும் பொருளாதாரப் பாதையின் வழியில் இந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அமைந்துள்ளன.  ஆகவே சீனா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க விடுத்த கோரிக்கைக்கு தடை விதித்தது.

இது குறித்து பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கடந்த 1950 ஆம் ஆண்டு சீனாவுக்கு இந்தியா வீட்டோ பவர் அளித்தமைக்கும்,  மசூத் அசாரை விடுதலை செய்ததற்கும் இன்று வரை சரியான விலை கொடுத்து வருவதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஏற்கனவே மூன்று முறை மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளது.   மூன்று முறையும் இப்போதைப் போலவே சீனா தடை விதித்துள்ளது.    நான்காம் முறையும் தடை விதித்த சீனா மீது இந்தியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்தியர்கள் பலரும் தற்போது (#BoycottChineseProducts) சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்னும் ஹேஷ் டாக் ஐ பதிந்து இதை பிரபலமாக்கி வருகின்றனர்.   இவ்வாறு ஹேஷ்டாக் பல பிரபலங்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிந்து தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்ற்னர்.

அத்துடன் இதன் மூலம் இந்தியாவில் சீன வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்பட்டு அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்க வேண்டும் எனவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.