
தி பேமிலி மேன் இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ். 2019ல் வெளியான இந்த தொடரில் தேசியப் புலனாய்வு முகமையில் அச்சுறுத்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணியில் பணியாற்றும் அதிகாரியான ஸ்ரீகாந்த் திவாரியின் சாகசங்களைச் சொல்லும் கதை.
அமேசான் ப்ரைமில் வெளியான இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து இரண்டாவது சீஸன் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீஸனுக்கான ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இந்த ட்ரெய்லரில் “நான் எல்லோரையும் கொல்லுவேன்” என சமந்தா பேசுகிறார். இலங்கையின் வரைபடமும் சீருடையில் போராளிக் குழுக்கள் பயிற்சி பெறும் காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்த தமிழர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாக இந்த சீரிஸ்-க்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களை ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர். இதன் விளைவாக #FamilyMan2_against_Tamils என்ற டேக் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]