தமிழில் சாமி, திருப்பாச்சி, கோ, சகுனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
நேர்க்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட கோட்டா சீனிவாச ராவ், ”கம்மா சமூகத்துக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஏனெனில் எனது வாழ்க்கையில் நான் உண்ட 95 சதவீத உணவு அந்த சமூகத்தின் காரணமாக எனக்கு கிடைத்தது. அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு உணவளித்திருக்கின்றனர். இதனால் நான் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் சாப்பிட்ட 95% உணவு அவர்களால் கிடைத்தது என்றால், மீதமுள்ள 5% ரெட்டி மற்றும் ராஜூஸ் சமூகங்களிடம் இருந்து கிடைத்தது. இந்த உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை” என்றதோடு, நடிகர் நாக பாபு மீது சாதி ரீதியாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
அதே நேர்க்காணலில், நடிகை அனுசுயா பரத்வாஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆடை அணிவது எனக்குப் பிடிக்கவில்லை என கூறியுள்ளார் .
தற்போது ”நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என சிலர் வன்மமாக பேசியிருப்பது கவலை அளிக்கிறது” என அனுசுயா தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.