நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
சார்ந்தோர் ‘சாந்தமா’ மாறிட்டாங்க போல
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு இடத்தில் நின்று மனைவியோடு தமிழக ஆளுநர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் …
கோவிலில் எங்கே என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதெல்லாம் வழிபாட்டிற்காக பக்தராய் வரும் ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு தெரிய வாய்ப்பில்லை.. அவசியமுமில்லை ..
ஆனால் இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மரபு மற்றும் கட்டுப்பாடு என ஆளுநருக்கு அதிகாரிகளும் தீட்சதர்களும் சொல்லியிருக்க வேண்டும்..
சொன்னால், அதையும் மீறி ,”நான் இங்குதான் நிற்பேன். எவன் என்னை கேட்க முடியும் ?” என்றா ஆளுநர் கையை முறுக்க போகிறார்..
இதே சிதம்பரம் நடராஜர் கோவிலில், மாநில ஆளுநரை விட மிகப்பெரிய அரசியல் சாசன சட்ட பதவி வகித்தவர்களையெல்லாம் ஆகம விதிகள் என்று, சட்டையை கழட்டு இதற்கு மேல் வரக்கூடாது எனச் சொல்லி தீட்சதர்கள் படாதபாடு படுத்தியிருக்கிறார்கள்..
இப்போதுகூட கோவிலுக்குள் ஒரு சாமானிய பக்தன் செல்போனில் படம் பிடித்தால் அவனுக்கு அறிவுரை சொல்ல மாட்டார்கள்.. வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதித்து செல்போனை பிடுங்கிக் கொள்வார்கள்.. உலகமே அழிந்து விட்டது மாதிரி கூப்பாடு போடுவார்கள்..