திராவிடர் கழக பிரமுகரும் உயர்நீதிமன்ற  வழக்கறிஞருமான அருள்மொழி (Annamalai)   அவர்களின் முகநூல் பதிவு: 

விழுப்புரத்தில் கொல்லப்பட்ட   நவீனா
விழுப்புரத்தில் கொல்லப்பட்ட நவீனா

ஞ்சையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கலைச்செல்வி…
விழுப்புரத்தில். எரித்து கொல்லப்பட்ட நவீனா..
இருவரும். நம் தமிழ்ப்பெண்கள்..
நமது குழந்தைகள்…

பத்தாம் வகுப்பு மாணவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொல்லப்பட்டு
பாத்திரத்தில் போட்டுவைக்கப்பட்ட
ஏழு வயது குழந்தை..
கூலிவேலைக்குப்போன அம்மாவை தேடிப்போய் வீட்டிற்குள் திரும்பாமல் சாக்குமூட்டையில் சுற்றி நிலத்தில் புதைக்கப்பட்ட. 12 வயது சிறுமி…
தஞ்சையில் கொல்லப்ட்ட கலைச்செல்வி
தஞ்சையில் கொல்லப்ட்ட கலைச்செல்வி

எல்லோருமே தமிழ்ப் பெண்கள்.
அவர்களை சிதைத்து கொன்று தங்கள் வெறியைத்தீர்த்துக் கொண்ட அனைவரும் தமிழ் ஆண்கள்.
இவற்றை விசாரிப்பதில் காவல்துறை காட்டும் பாரபட்சம்….
விவாதிப்பதில் ஊடகங்கள் காட்டும் பாராமுகம்..
போராட்டம் நடத்துவோரின் சாதிச்சாயம்..
திடீரென்று கவியும் கள்ள மவுனம்…
அய்யோ..தமிழ்ப் பெண்கள் இனி பிள்ளைபெறாதிருப்பாராக…!