சென்னை
இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தின்சரி மாற்றி அமைக்கின்றன. சுமார் 137 நாட்களாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி விலையில் மாற்றம் இன்றி காணப்பட்டது.
தற்போது தேர்தல் முடிந்து முடிவுகளும் ஆளும் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. தற்போது மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தொடங்கி உள்ளது. இந்த விலை உ யர்வு தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.67க்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ.93.71 க்கும் விற்கப்ப்படுகின்றன. இத்தகைய தினசரி விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் துயர் அடைந்துள்ளனர்.
இது குறித்து டிவிட்டரில் ஒரு நெட்டிசன்,
“ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் அதிகரிக்க வேண்டுமெனில் ஒரே நாளில் விலை ஏற்றாமல் தினமும் 75 பைசா வீதம் 20 நாட்களுக்கு விலையேற்றி வலி இல்லாமல் கொல்லும் அந்த மனசு இருக்கே! 😏😞”
எனப் பதிவு இட்டுள்ளார்.