பார் டிஸ்கோ ஒன்றில் குடிமகன் நடனமாடுவதற்காக கந்த சஷ்டி கவசம் பயன்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சமீப நாட்களாக இறைவன் பாடல்கள், ஸ்தோத்திரங்களை மறு உருவாக்கம் செய்து, அதற்கு நவீன முறையில் நடனமாடும் கலாச்சாரம் பெருகி வருகிறது. பெங்களூரு ரமணி அம்மாள் பாடிய குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற பாடல் முதல், பல பாடல்கள் குத்தாட்டம் போடுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இப்பாடல்களை நவீன முறையில் மாற்றி அமைத்து, கல்லூரி நிகழ்வுகளுக்கும் அவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது ஒருபடி மேலே சென்று, பார் டிஸ்கோவில் குடிமகன்கள் அருவருப்பான முறையில் நடனமாடுவதற்காக சூலமங்கலம் சகோதரிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு, நெட்டிசன்கள் இடையே சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. பார் டிஸ்கோவிற்காக இப்பாடலை பயன்படுத்தியது தவறு என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு, இப்பாடலை பயன்படுத்திய பார் டிஸ்கோ மீதும் நெட்டிசன்கள் பாய்ந்துள்ளனர்.