யக்குநர் பாலாவின் திரைப்படங்களில் ஆபாச வசனங்கள், கொடூர காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். இதனால் சர்ச்சைகள் ஏற்படுவதும் உண்டு.

அதே போல, அவரது இயக்கத்தில் வெளிவர இருக்கும் நாச்சியார் பட டீசரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதில், நாயகி ஜோதிகா, “தே.. பையா” என்று உச்சரிக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  வலைதளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

“ஆண் ஒருவர் இந்த வசனத்தை பேசியிருந்தால், இந்த சர்ச்சை உருவாகி இருக்குமா.. பெண் பேசினால் மட்டும் ஏன் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது”

அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்றும், திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடித்து வெளிவந்திருக்கும் 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற படங்கள் நல்ல கருத்தைக்கூறி அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ள நிலையில், நாச்சியார் படத்தில் இதுபோன்ற ஒரு வக்கிரமான வசனத்தை பேசி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதாக அவரது ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

ஒருசிலரோ, அவர் ஒரு நடிகை. கொஞ்சகாலம் அவர் குடும்ப தலைவியாக மாறியிருந்தார். ஆனால், தற்போது அவர் நடிக்க வந்துள்ளதால், அவர் மீண்டும் நடிகையாகிவிட்டார்… அவரிடம் இருந்த வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

வேறு சிலரோ, கன்னியத்திற்கு பெயர்பெற்ற சிவகுமார் குடும்பத்தை சேர்ந்தவரோ இப்படியொடி வசனத்தை பேசியுள்ளார் என அதிர்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

ஒருசிலரோ  “சிவகுமார் குடும்பத்தில் இருப்பவர் இந்த வசனத்தைப் பேசியிருக்கக் கூடாது” என்றும், வேறு சிலரோ  “பாலா படம் இப்படித்தான் இருக்கும்” என்றும், இதில் ஜோவை குற்றம் சொல்லக்கூடாது என்றும் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

இந்த வசனம் காரணமாக ஏற்பட்டுள்ள சர்சையினால் இந்த படத்தின் டீசர் லட்சக்கணக்கானோர் பார்க்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், இத்தனை காலம் நடிகர் சிவகுமார் கட்டிக்காத்து வந்த கண்ணியம், ஜோதிகாவின் இதுபோன்ற செயல் காரணமாக காற்றில் பறந்துவிட்டது.

அவரது குடும்பத்தினர் மீது தமிழக மக்கள் வைத்திருந்த  மதிப்பும் மரியாதையும் அதலபாதாளத்தை நோக்கி போயுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.