ரிந்தெம், நெதர்லாந்து

ன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு 17 வயதுப் பெண் அவர் வேண்டுகோளுக்கிணங்க கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நோவா போத்தோவென் என்னும் 17 வயது டச்சுப் பெண் நெதர்லாந்து நாட்டில் உள்ள அரிந்தெம் நகரில் வசித்து வருபவர் ஆவார். அவர் குழந்தையாக இருக்கும் போது பாலியல் கொடுமைக்கு உள்ளானவர். அந்த நிகழ்வுக்கு பிறகு அவருடைய மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக அவர் மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்தார்.

மன உளைச்சல் காரணமாக நோவாவுக்கு உறக்கம் வராத நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி எந்த ஒரு உணவையும் சாப்பிட பிடிக்காத நிலையும் ஏற்பட்டது. அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பல மனோதத்துவ நிபுணர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவரால் மன உளைச்சலில் இருந்து மீள முடியாமல் கடும் துயரம் அனுபவித்து வந்தார்.

எனவே அவர் தனது வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். நெதர்லாந்து நாட்டு சட்டப்படி கருணைக்கொலை சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அனுமதியை பெறுவது அவ்வளவு எளிதல்ல. இந்த முடிவு நோயாளியால் சுயமாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளார் என்பதை அரசு நிச்சயம் செய்ய வேண்டும்

அதை ஒட்டி சென்ற வருடம் நோவா அளித்த மனுவுக்கு கடந்த வாரம் ஒப்புதல் கிடைத்துள்ளது. சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று மருத்துவக் குழு ஒன்று விஷவாயுவை செலுத்தி அவருக்கு மரணம் ஏற்படுத்தி உள்ளனர். நோவாவின் மரணம் நெதர்லாந்து நாட்டை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.