டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக, பயனர்கள் வீட்டிலிருந்தே புகைப்படங்கள், சீரிஸ் போன்ற ஓடிடி வரும் அனைத்தையும் எளிதாக பார்க்கும் வகையில் ‘நெட்பிளிக்ஸ்’  எனப்படும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் சந்தா செலுத்தி பதிவு செய்யும் பயனர்கள், தங்களது பதிவை வைத்து அதிகபட்சமாக 5 பேர் வரை உபயோகப்படுத்த முடியும். இதனால், ‘நெட்பிளிக்ஸ்’-க்கு வருமானம் பாதிக்கப்படுவதால், அதை தடுக்க ‘நெட்பிளிக்ஸ்’ அதிரடி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

நெட்பிளிக்ஸ் அல்லது நெட்ஃபிளிக்சு அல்லது நெட்ஃபிளிக்ஸ் (Netflix, Inc) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் கேடோஸை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும்.  இதுபோல,   அமேசான் போன்ற  பல ஓடிடி தளங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதில், உலக அளவில் பிரபலமான ஒடிடி தளங்களில்  நெட்ஃபிளிக்ஸ் முதன்மையாக உள்ளது. இந்நிறுவனத்துக்கு  கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  இதில்,  பல மொழிகள் தொடர்பான படங்கள்,  வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த தளத்தில்  சந்தா செலுத்துவதன் மூலம் பலகோடிபேர்  நெட்பிளிக்ஸில் வெளியாகும் வீடியோக்களை கண்டு ரசித்து வரகின்றனர். இதில் பதிவு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு பாஸ்வேர்டை பயன்படுத்தி அதிகபட்சமாக 5 பேர் வரை, இந்த தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்த்து வருகின்றனர். அதாவது, , ஒரேஒரு  நெட்பிளிக்ஸ் கணக்கு பலரால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 10 கோடிக்கும் அதிகமானோர் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.  இதனால் அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டாலும், தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், இந்த பிரச்னையை பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இருந்தது.

ஆனால், 2023ம் ஆண்டு முதல், பார்வேர்டு பகிர்வதற்கு செக் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வருவாய் இழப்பை சந்திக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய நடைமுறை புத்தாண்டு முதல் அமலாகிறது.

அதன்படி, இனிமேல், ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஷ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய நெட்ஃபிளிக்ஸ் இணை நிறுவனர்  ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings), இவ்வளவு காலமாக நெட்ஃபிளிக்ஸில் விளம்பங்கள் கிடையாது; பாஸ்வேர்டு ஷேரிங் ஆப்சன் இருந்தது; இவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், இனிவரும் காலத்தில் நெட்ஃபிளிக்ஸில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும். கடந்த பத்தாண்களில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளதால் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலண்டில் மேலும், 2 மில்லியன் வாடிக்கையாளர்களை இழக்கும் என கணித்துள்ளது, அதனால் புதிய நடைமுறை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது  எனவும் கூறி உள்ளார்.