புதுடெல்லி:
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்களுக்கு மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர், தங்கள் கனவை தலைவர்கள் நிறைவேற்றுவார்கள் என மக்கள் நம்புகிறார்கள்.
அவர்களது கனவு நிறைவேறாவிட்டால், அதே தலைவர்களுக்கு மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள்.
எனவே உங்களால் செய்யக் கூடிய வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்றார்.
மத்திய அமைச்சரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் கட்சிகள், பாஜகவின் நிலையை கண்ணாடி போல நிதின் கட்காரி பிரதிபலிக்கிறார் என்றனர்.
Patrikai.com official YouTube Channel