காத்மாண்டு: நேபாள நாட்டில் கொரோனா இல்லை என்று அறிவித்த அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில்  கொரோன வைரஸ் தொற்று இல்லை என்று 8 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் யோகேஷ் பத்தராய் அறிவித்து இருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சமூக வலைத்தள பக்கத்தில் யோகேஷ் பத்தராய் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
கடந்த வாரம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தன. ஆகையால், காத்மாண்டு நகருக்கு வெளியே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.
அப்போது, காய்ச்சல் ஏற்பட மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. எனவே, கடந்த ஒரு வாரத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறி உள்ளார்.