காத்மாண்டு: நேபாள நாட்டின்  புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேபாள நாட்டில் தேர்வு முறையானது, இந்தியாவைப் போது, சட்டமன்ற (மாகாண சபை) உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பனிர்களும் வாக்களித்து தேர்வு செயப்படுகின்றனர். தற்போதைய  அதிபர் பித்யாதேவி பண்டாரியின் பதவிக்காலம் வரும் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடலும், எதிர்க்கட்சி சார்பில், சுபாஷ் சந்திர நெபாங் போட்டியிட்டனர்.

நேபாள நாடாளுமன்றத்தில் 313 உறுப்பினர்களும் 518 மாகாண சபை உறுப்பினர்களும் வாக்களித்து, தங்களது வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி நேற்று வாக்குப்பதிவு நடெபற்றது. இதில்,  அதிக வாக்குகள் பெற்று ராம் சந்திரா பவுடல் அதிபராக  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம் சந்திர பவுடல்  33 ஆயிரத்து 802 எலக்டோரல் வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெம்பவாங் 15 ஆயிரத்து 518 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றனர். அதன்படி, ராம் சந்திர பவுடல்    214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.  நாட்டின் முக்கியமான 8 கட்சிகள் ராம் சந்திர பவுடலை ஆதரித்தன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுபாஷ் சந்திர நெபாங்கை முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் கட்சி மட்டுமே ஆதரித்தது. புதிய அதிபர் ராம்சந்திர பவுடலுக்கு பிரதமர் பிரசந்தா, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.